விபத்தில் தந்தை பலி ; தாய், பிள்ளைகள் படுகாயம்
அநுராதபுரத்தில் கெக்கிராவ ஏ9 வீதியில் மிரிஸ்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (15) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் விபத்து
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கெக்கிராவையிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த தந்தையும் தாயும் இரண்டு பிள்ளைகளும் படுகாயமடைந்துள்ள நிலையில் கெக்கிராவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கெக்கிராவை பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடையவர் என தெரிவித்த கெக்கிராவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.