மருமகனை கொலை செய்த மாமனார்; தமிழர் பகுதியில் பரபரப்பு
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் இன்று அதிகாலை நபர் ஒருவர் கிலஒ செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாமனாருக்கும் மருமகனுக்கும் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றியதில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் ஆறுமுகம்பிள்ளை துஸ்யந்தன் எனும் 34 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடும்ப தகராறு
பிரிந்திருந்த தனது மனைவியை பார்க்க சென்ற குறித்த நபரை, மனைவியின் தந்தை வழிமறித்துள்ளார்.
இதன்போது இருவருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது, இதனால் ஆத்திரமடைந்த மாமனார் மண்வெட்டி பிடியினால் தாக்கியுள்ளதாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாமனாரின் தாக்குதலில் படுகாயமடைந்த மருமகன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வரும் நிலையில் மாமனாரால் மருமகன் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.