திருமணமான மகனின் முறையற்ற தொடர்பால் தாக்குதலுக்கு உள்ளான தந்தை!
மகனின் காதலியின் உறவினர்களால் பொலிஸ் சார்ஜன்ட்டான தந்தை நேற்று தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
தாக்குதலுக்குள்ளான நபர் நாகொட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் , பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
தகாத உறவு
பொலிஸ் உத்தியோகத்தரின் மகன் திருமணமான ஆசிரியர் என்பதோடு அவர் திருமணத்திற்கு அப்பாலான உறவில் பிறிதொரு பெண்ணிடம் இருந்து வந்துள்ளார்.
இது தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக பொலிஸாரின் வீட்டிற்க்கு சென்ற மகனின் காதலியின் உறவினர்கள் தந்தைமீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் 6 பேரை கைது செய்துள்ள களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.