போயா தினத்தில் மதுபானம் விற்றவருக்கு நேர்ந்த கதி
கல்முனையில் போயா தினத்தில் , வீடொன்றில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
போயா விடுமுறை நாளான இன்று (06) அன்று மதுபான விற்பனையில் ஈடுபடுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் மாறுவேடத்தில் சென்று கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கைதானவர் சட்ட விரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி வீட்டில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 40 க்கும் மேற்பட்ட பியர்கள் உட்பட 25 க்கும் மேற்பட்ட மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.