அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து; விமானநிலையத்தில் இருந்து வந்தவர்களுக்கு நேர்ந்த கதி
இன்று (08) காலை பயணித்த வேன் ஒன்று, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பாலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லொறியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
மாத்தறை-அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இன்று (08) காலை பயணித்த வேன் ஒன்று, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பாலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
12 பேர் வைத்தியசாலையில்
விபத்தின் போது வேனில் பயணித்த 12 பேர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேனில் பயணித்த குழு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்ததாகவும், அவர்கள் மாத்தறை முலட்டியன பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த அனைவரும் '1990 சுவசெரிய' அம்பியூலன்ஸ் ஊடாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாலிம்பட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.