இன்று காலை இலங்கையை உலுக்கிய கோர விபத்து ; 21 ஆக உயர்ந்தது பலி எண்ணிக்கை Update
இரண்டாம் இணைப்பு
நுவரெலியா - கண்டி பிரதான வீதியின், கொத்மலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை - கெரண்டி எல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முதல் இணைப்பு
ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை தற்போது 15 ஆக அதிகரித்துள்ளது.
நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளானதாகத் தெரியவந்துள்ளது.
விபத்து இடம்பெற்ற இடத்தில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.