17 வயது இளைஞனை பலியெடுத்த கோர விபத்து
Kalutara
Sri Lanka Police Investigation
Accident
Death
By Viro
களுத்துறை - பண்டாரகம வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பண்டாரகம நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மேலதிக விசாரணை
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பின்னால் அமர்ந்து பயணித்தவரும் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னால் அமர்ந்து சென்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் வாத்துவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் எனத் தெரியவந்துள்ளது.
மொரந்துடுவ பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US