திருகோணமலையில் விவசாயி ஒருவரின் மோட்டார் சைக்கிளுக்கு விசமிகள் ஏற்பட்ட நிலை
திருகோணமலையில் விவசாயி ஒருவரின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி தீயிட்டு கொழுத்திவிட்டு தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
சேருநுவர - சோமபுர பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்தி விட்டு வயலுக்கு சென்றுள்ளார்.
தனது வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளை வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் அவ்விடத்தில் இல்லாது அது திருடப்பட்டுள்ளதை அறிந்துள்ளார்.
குறித்த மோட்டார் சைக்கிளை சோமபுர பிரதேசத்தில் வைத்து திருடிச் சென்றவர்கள், திடிய மோட்டார் சைக்கிளின் முக்கிய உதிரிப் பாகங்களை திருடிவிட்டு மோட்டார் சைக்கிளை லிங்கபுரம் பகுதியிலுள்ள வீதியில் வைத்து தீயிட்டு கொழுத்திவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்