மீண்டும் கட்டணம் ; கொழும்பு மாநகர சபை வெளியிட்ட அறிவிப்பு
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
By Viro
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன தரிப்பிடக் கட்டணங்கள் நாளை முதல் மீண்டும் அறிவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர ஆணையாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நிர்வாகக் காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தக் கட்டண அறவீடு நடவடிக்கைகள், நாளை முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட தரிப்பிட இடங்களில் கடமையில் உள்ள ஊழியர்களிடமோ அல்லது டிஜிட்டல் முறையிலோ கட்டணங்களைச் செலுத்த முடியும்.
விதிகளை மீறி வாகனங்களை நிறுத்துபவர்கள் மற்றும் கட்டணம் செலுத்தத் தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாநகர ஆணையாளர் எச்சரித்துள்ளார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US