பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம்; விஜய் முடிவால் ரசிகர்கள் ஏமாற்றம்!
நாளையதினம் (யூன் 22) நடிகரும் அரசியல்வாதியுமான இளையதளபதி விஜய் இன் பிறந்தநாளாகும். அவரது பிறந்தநாளை வருடம் தோறும் ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.
இந்நிலையில் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என விஜய் அறிவித்துள்ளமை ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி விச சாராய உயிரிழப்பு
கள்ளக்குறிச்சியில் விஷசாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு தனது கட்சியின் மாவட்ட செயலாளருக்கு, விஜய் அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக, இந்த கள்ளசாராய மரணங்கள் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுவதாக, அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய்யின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
எனவே தலைவர் அவர்களின் உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.