தெற்காசியாவின் மிக உயரமான இடத்தில் உணவருந்த ஆசையா? தாமரை கோபுரத்திற்கு செல்லுங்கள்!
கொழும்பு தாமரை கோபுரத்தில் முதலாவது சுழலும் உணவகத் திறப்பு விழா கடந்த சனிக்கிழமை (09) ஆரம்பிக்கப்பட்டது. இந்த சுழல் உணவகம் இன்று (11) முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுழலும் உணவகத்தின் வருவாயில் 80% தாமரை கோபுரத்திற்கும் 20% சிட்ரஸ் ஹோட்டளுக்கும் சொந்தமாகும் என தெரியவந்துள்ளது .
7 நாடுகளின் உணவு வகை
அதேவேளை 7 நாடுகளின் உணவு வகைகளை உள்ளடக்கிய இந்த உணவகம் சுமார் இருநூறு பேர் சாப்பிடும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது .
சுழலும் உணவகம் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை திறந்திருக்கும் மற்றும் மாலை 6.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை திறந்திருக்கும்.
அதேசமயம் இங்கு உணவருந்த , தொலைபேசி அல்லது ஒன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட வேண்டும்.
மேலும் சுழலும் இந்த உணவகம், தெற்காசியாவின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள முதல் சுழலும் உணவகம் எனவும் கூறப்படுகின்றது.