சமூக ஊடக காணொளி ; பிரபல இசைக்கலைஞர் கைது
போதைப்பொருட்கள் மற்றும் போலியாக தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் பிரபல இசைக்கலைஞர் ஒருவர் ஹோமாகம பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
6 பேர் கொண்ட குழு ஒன்று துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு போதைப்பொருள் பாவனை செய்யும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்துள்ளது.
அது தொடர்பில் கஹதுடுவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த காணொளியில் இலங்கையின் பிரபல இசைக்கலைஞர் ஒருவரும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

18 வருடங்களின் பின் தாயகம் வந்த குடும்பஸ்தர் மீது கொடூர தாக்குதல்; யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி!
இதனையடுத்து ஹோமாகம பிரதேசத்தில் உள்ள பிரபல இசைக்கலைஞரின் வீட்டில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 20 மில்லிகிராம் ஐஸ், 25 கிராம் ஹேஷ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் போலியாக தயாரிக்கப்பட்ட துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.