பிக் பாஸ் ராஜுவின் செயல்கள் குறித்து பேசிய பிரபல இசையமைப்பாளர்
பிக் பாஸ் சீசன் 5 தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளுக்கு நாள் போட்டியாளர்களிடம் மோதல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இருப்பினும் இந்த வீட்டில் சில போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு விருப்பமான போட்டியாளர்களாக இருக்கின்றனர் அதில் ராஜுவும் ஒருவர். ஆனால் அவர் பாதுகாப்பான ஆட்டம் விளையாடுவதாகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது பிக் பாஸ்சில் ராஜுவின் செய்லபாடுகள் குறித்து பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பது, ஒரே ஒரு காரணத்திற்காக பவானியை இன்னும் கட்டம் கட்டி வெறுப்பாகி சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவரை பற்றி குறை சொல்லி வருகிறார் ராஜு. பவானிக்கு சாப்பாடு வேண்டாம் என்று சொல்கிறார். உடனே நீருப் வந்து ஒருவருக்காக எல்லாம் செய்ய முடியாது என்று சொல்கிறார். அப்படி நிரூப் சொல்கிறார் என்றால் அவர் கிச்சனில் அதிகமாக வேலை செய்கிறார்.
அதனால் அவருக்கு சொல்வதற்கு எல்லா உரிமையும் இருக்கிறது. இதுதான் சமயம் என்று பவானி, பிரியங்காவிடம் சொல்லி ஒரு சப்பாத்தி செய்து கொள்வால் என்று நக்கலாக ராஜு பேசுகிறார். வீட்டுக்குள் எல்லோரும் தங்களுக்கு வேண்டியதை மற்றவர்களிடம் சொல்லி வேண்டியதை செய்து சாப்பிடுகிறார்கள். ராஜுவும் சமைத்துத் தர சொல்லி கேட்டு சாப்பிட்டு இருக்கிறார்.
ஆனால், பவானி கேட்டால் மட்டும் தப்பா? இது உங்களால் பொறுக்க முடியவில்லையா? சமையல் டீமில் இருக்கும் போது ராஜு மற்றும் பிற போட்டியாளர்கள் உதவி பண்ண வில்லை என்று பவானி சொல்லியிருந்தார்.
மேலும் தனது இமேஜ் கேட்டுவிடக்கூடாது என கேமராவிற்கு பயந்து பயந்து நடுங்கி ராஜு இருட்டுக்குள்ளே வாழும் குழி எலி போல் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்.