கனடா வாழ் குடும்ப பெண்ணால் யாழில் இரண்டுபட்ட குடும்பம்; பிள்ளைகளுடன் தவிக்கும் இளம் மனைவி
கனடா வாழ் 49 வயது குடும்பப் பெண் தனது கணவனை தன்னிடமிருந்து பிரித்துவிட்டதாக கூறி 31 வயதான 2 பிள்ளைகளின் தாயார் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சட்டநடவடிக்கை எடுக்கவுள்ள குடும்பப் பெண்
கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட குடும்பப் பெண் , யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் உள்ள தனது வீடு, காணி மற்றும் சொத்துக்களை பராமரிப்பதற்காக, தனது வீட்டில் கணவனின் துாரத்து உறவுமுறையான குடும்பம் ஒன்றை அமர்த்தியிருந்தார்.
கனடா பெண்ணின் கணவர் சிலவருடங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில் அடிக்கடி யாழ்ப்பாணம் வந்து சென்றுள்ளார். இந்நிலையில் தனது கணவனுடன் நெருக்கம் ஏற்பட்டதாக குடும்பஸ்தரின் மனைவி கூறுகின்றார்.
அவர்களின் தொடர்பு தெரியவந்ததை அடுத்து , கனடா வாழ் பெண்ணின் வீட்டில் இருந்து வெளியேறி தனது சொந்த இடமான பளைப்பகுதியில் குடியேறியதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் அண்மையில் கனடாவிலிருந்து வந்த பெண் தனது கணவனை கொழும்புக்கு கூட்டிச் சென்ற நிலையில் தான் தற்கொலைக்கு முயன்றதாகவும் குடும்பஸ்தரின் மனைவி தெரிவித்துள்ளார்.

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு ; கொழும்பு, யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !
கணவர் அரபு நாடு ஒன்றுக்கு செல்வதாக கூறி சில மாதங்களுக்கு முன் கடவுச்சீட்டு எடுத்த நிலையில் தற்போது கனடா பெண்ணுடன் தலைமறைவானதாகவும் மனைவி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கணவர் உடனடியாக திரும்ப தங்களிடம் வராதுவிட்டால் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.