எரிபொருளுக்காக காத்திருந்த குடும்பஸ்தர் பரிதாப உயிரிழப்பு!
கிளிநொச்சியில் காலை 9 மணி தொடக்கம் மாலை 9 மணிவரை உணவில்லாமல் டீசலுக்காக வரிசையில் காத்திருந்த 3 பிள்ளைகளின் தந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவகையில், உயிரிழந்த குடும்பஸ்தர் கடந்த 2ம் திகதி டீசல் வாங்குவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அன்று காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை காத்திருந்தும் டீசல் கிடைக்காததாலும், ஊரடங்கு அமுலானதாலும் வீட்டுக்கு திரும்பிய அவர் மறுநாள் அதிகாலை வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்துகொண்டிருந்த அரச பேருந்து கிளிநொச்சி நகரை அண்டிய பகுதியில் வீதி ஓரத்தில் ஒருவர் மயங்கி கிடப்பதை அவதானித்து உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து மேலதிக சிகிற்சைகாக உடனடியாக அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவருடைய மரணம் தொடர்பில் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டார்.