யாழில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்! சிறுமி உட்பட மூவர் கைது
யாழ்ப்பாணம் - கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டரங்கு வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில் காயங்களுடன் 52 வயதான குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (12-08-2023) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் அயல் வீட்டில் உள்ள சிறுமி உட்பட இரு பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உயிரிழந்த நபருக்கும் அயல் வீட்டிலிருந்த 8 வயது சிறுமிக்கும் இடையில் இருந்த பிரச்சினை காரணமகாகவே இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அயல் வீட்டில் இருந்த அம்மா மற்றும் தாய் அவரை அடித்துக் கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பேரில் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவி திருமணச் சடங்கிற்கு சென்ற வேளை குடும்பஸ்தர் தனிமையாக வீட்டில் இருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று காலை உறவினரொருவர் இவர்களது வீட்டிற்கு சென்று பார்த்தபோது குடும்பஸ்தர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்த உறவினர் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை உயிரிழந்தவரின் சடலத்தில் அடிகாயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் 52 வயதான கணபதிப்பிள்ளை மகேந்திரன் என்ற குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.