முல்லைத்தீவில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் சிவநகர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் அரைஏக்கர் சிவநகர் ஒட்டுசுட்டானை சேர்ந்த தெய்வேந்திரம் ரஜீவ் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் உளவளசிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு பிரோத பரிசேதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, மரணவிசாரணை அதிகாரியின் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தினர் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றார்கள்.