யாழில் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவாலி பகுதியில் இன்று (22) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நவாலி வடக்கு பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக கடன் பெற்ற மனைவி
குறித்த நபர் வீட்டில் சடலமாக கிடப்பதைக் கண்ட உறவினர்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, சடலமானது யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தனது மனைவி அதிக கடன் பெற்றதன் காரணமாக மனவிரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.