வாக்குவாதத்தால் குடும்பஸ்தர் ஒருவருக்கு நேர்ந்த சோகம்
மொரட்டுவையில் குடும்பஸ்தர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லுனாவ பிரதேசத்தில் வீடொன்றின் முன்பாக நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர்
இதில் 58 வயதுடைய நபரே உயிரிழந்துள்துள்ளார் என்று மொரட்டுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாக்குவாதத்தின்போது அந்த நபர் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.