பாரவூர்தியில் மோதுண்ட குடும்பஸ்தர் பலி!
பதுளை - பண்டாரவளை பிரதான வீதியின் ஹல்பே எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த சைக்கிளுடன் பாரவூர்தி ஒன்று மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மேலதிக விசாரணைகள்
குறித்த விபத்தில் உந்துருளி செலுத்துனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக எல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெல்லவாய - பெரகெட்டியவைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகிறது. சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய, பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, உயிரிழந்தவரின் சடலம் தெமோதரை பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் எல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.