சீதுவையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் பலி
அண்மையில் சீதுவை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரில் தந்தை இன்று (06) உயிரிழந்துள்ளார்.
கடந்த 28ஆம் திகதி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், அந்த தாக்குதலில் மகன் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
காரில் வந்த கும்பல் அவர்கள் 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு வெளிநாட்டில் இருந்து வழிநடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த குடும்பத்தின் தொழிலதிபர் மகனைக் கொலை செய்ய துப்பாக்கிதாரிகளுடன் குறித்த தரப்பினர் ஒப்பந்தம் செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
எனினும் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த அவர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.