யாழில் பெரும் சோகம்... திடீரென உயிரிழந்த குடும்பஸ்தர்! பரிசோதனையில் அதிர்ச்சி
யாழில் உள்ள பகுதியொன்றில் நிமோனியா தொற்று காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவமானது நேற்றையதினம் (04-01-2025) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியைச் சேர்ந்த 42 வயதான யுவானிஸ் நேசராசா என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த குடும்பஸ்தர் கடந்த 30ஆம் திகதி முதல் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 3ஆம் திகதி இரவு திடீரென உடல்நிலை மோசமடைந்ததால் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (04-01-2025) பிற்பகல் 3 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
நிமோனியா தொற்று ஏற்பட்டதால் குடும்பஸ்தர் உயிரிழந்ததாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.