யாழில் அதிர்ச்சி சம்பவம்: வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த குடும்பஸ்தர்!
யாழ்ப்பாண மாவட்டம் - கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டரங்கு வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில் 54 வயதான குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இன்றைய தினம் (12-08-2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவி நேற்று திருமணச் சடங்கிற்கு சென்றவேளை குடும்பஸ்தர் தனிமையாக வீட்டிலிருந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் (12-08-2023) காலை உறவினர் ஒருவர் இவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது குடும்பஸ்தர் நிர்வாணமாக உயிரிழந்த நிலையில், காணப்பட்டதை அவதானித்து பின்னர், அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
பின்னர் சம்பவம் இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்தவரின் சடலத்தில் தாக்குதலினால் ஏற்பட்டுள்ள காயங்கள் காணப்படுவதாகவும் இதனால் குறித்த குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இச் சம்பவத்தில் 54 வயதான கணபதிப்பிள்ளை மகேந்திரன் என்ற குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி மயூரன் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ். கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்/