அபுதாபியில் ஏற்பட்ட அசம்பாவிதம்: யாழில் குடும்பஸ்தர் நேர்ந்த சோகம்!
யாழ்ப்பாண பகுதியில் கட்டடத்திலிருந்து கீழே விழுந்து ஒரு வருடத்திற்கும் மேலாக கோமாவில் இருந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 55 வயதான முருகேசு விஜயரத்தினம் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குடும்பஸ்தர் அபுதாபிக்கு 2014ஆம் ஆண்டு சென்று அங்கு வேலை செய்து வந்த நிலையில் கடந்த 10.08.2022 அன்று மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
இதுவரையில், கோமா நிலையில் இருந்த நிலையில், கடந்த 17.11.2023 அன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்றையதினம் (25-11-2023) காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
குடும்பஸ்தரின் சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.