பேருந்தின் மிதிபலகையிலிருந்து விழுந்த குடும்பஸ்தர் பரிதாப உயிரிழப்பு
பேருவளை, காலி வீதியில் உள்ள மஸ்ஸல சந்தி பகுதியில் தனியார் பேருந்தில் ஏறிய ஒருவர், அதிலிருந்து விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பேருவளை பொலிஸார் இந்த விபத்து சம்பவம் நேற்று (10) நள்ளிரவு 12:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் பேருவளையில் வசிக்கும் 52 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் மஸ்ஸல சந்தியில் ஏறி, சுமார் 100 மீட்டர் தூரம் பயணித்தபோது, பேருந்தின் மிதிபலகையிலிருந்து விழுந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மாத்தறை பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் செல்வதாக தெரிவித்துவிட்டு, அவர் வீட்டை விட்டு வெளியேறியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்து தற்போது பொலிசாரால் காவலில் எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் சாரதி இன்று (11) களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.