கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் அதிரடி கைது!
சட்டவிரோத கிரேக்க வீசாக்களை பயன்படுத்தி ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற வர்த்தக குடும்பத்தை நான்கு பேர் கட்டுநாயக்க விமானத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றையதினம் (25-02-2024) இடம்பெற்றுள்ளது.
விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் குடும்பம் 1 கோடி 40 லட்சம் ரூபாவை தரகர் ஒருவரிடம் செலுத்தி அதற்குரிய போலியான கிரேக்க விசாக்களை தயார் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் நாத்தாண்டிய பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய தந்தை, 47 வயதுடைய தாயார் மற்றும் 21 மற்றும் 16 வயதுடைய 2 மகன்கள் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.