நுவரெலியாவில் வீழ்ச்சியடைந்த மரக்கறி விலைகள்
நுவரெலியா மத்திய சந்தையில் மரக்கறி வகைகளின் விலை தற்போது ஓரளவு வீழ்ச்சி கண்டு வருவதாக நுவரெலிய மத்திய சந்தையில் வியாபாரம் செய்யும் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர் .
இதன்படி இன்றைய விலைப்பட்டியலின் படி, ஒரு கிலோ போஞ்சி 600 ரூபாவிலிருந்து 540 ரூபாவாகவும், கறி மிளகாய் 600 ரூபாவிலிருந்து 500 ரூபாவுக்கும், தக்காளி ஒரு கிலோ 500 ரூபாவிலிருந்து 380 ரூபாவுக்கும், ஒரு கிலோ கரட் 400 ரூபாவிலிருந்து 360 ரூபாவுக்கும் வீர்பனை செய்யப்படுகின்றது.
அதேநேரம் , பெரிய வெங்காயம் ஒரு கிலோ 360 ரூபாவிலிருந்து 300 ரூபாவுக்கும், லீக்ஸ் ஒரு கிலோ 320 ரூபாவிலிருந்து 300 ரூபாவுக்கும், உள்நாட்டு உருளைக் கிழங்கு ஒரு கிலோ 340 ரூபாவிலிருந்து 300 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மரக்கறிக் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தங்களது கஷ்டத்தின் மத்தியில் சில மரக்கறி வகைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக கவலை வெளியிட்ட வியாபாரிகள், எனினும் கொள்வனவு செய்ய வருபவர்கள் குறைவாகவே காணப்படுகின்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக மீதமான மரக்கறிகளை குப்பைகளில் வீச வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட் டுள்ளோம் என கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் இவ்வாறு குறைந்த விலைக்கு மரக்கறி வகைகளை விற்பனை செய்து வரும் பணத்தில் மின்சார பட்டியல் கட்டணத்தைக் கட்டுவதா அல்லது வீட்டுச் சுமையை சரி செய்வதா,கடைக்கூலி கட்டுவதா, கடையில் தொழிலிக்கு வருபவர்களுக்கு சம்பளம் வழங்குவதா ? என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.