புனித பூஜை என்ற போர்வையில் சிக்கிய போலிகள்!
புனித பூஜை என்ற போர்வையில் பௌத்த துறவி ஒருவருடன் சுவாமி படங்களால் அலகரிக்கப்பட்ட வாகனத்தில் பொதுமக்களிடம் பணம் வசூலித்த போலி பக்தர்கள் மூவரை கம்பளை பொலிஸார் பொறுப்பில் எடுத்துள்ளனர்.
பொதுமக்கள் முறைப்பாடு
நேற்றையதினம் கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய சந்தேக நபர்களை பொறுப்பில் எடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது சந்தேக நபர்கள் சிவனொளிபாத யாத்திரையை அடிப்படையாகக் கொண்டு பணம் வசூலித்த விடயம் தெரியவந்துள்ளது .
விசாரணையின் போது தாங்கள் சட்ட ரீதியாகவே புனித பூஜைக்கு நிதி சேகரித்ததாக சந்தேக நபர்களின் ஒருவரான பௌத்த பிக்கு கூறியதையடுத்து சம்பந்தப்பட்டவர்க:ளை பொலிஸார் தொடர்புகொண்ட நிலையில் அப்படியான ஒரு அனுமதியினை தாங்கள் யாருக்கும் வழங்க வில்லையென அவர்கள் கூறியுள்ளனர் .
இதையடுத்து சிவனொளிபாத மலையின் புனிதத்தை கெடுக்கவேண்டாமென சந்தேக நபர்களை கடுமையாக எச்சரித்ததுடன் நகரைவிட்டு உடனடியாக வெளியேறுமாறும் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.