போலி விசாவில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற பெண் அதிகாரி உட்பட இருவருக்கு நேர்ந்த கதி!
போலி விசா மூலம் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி ஒருவர் உட்பட இருவர் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, போலி வீசாவில் வெளிநாடு செல்ல முற்பட்ட பெண் சந்தேகநபர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, குறித்த போலி வீசாவை வழங்கியதாகக் கூறப்படும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவரும் நேற்று (28-07-2023) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகநபரான பெண்ணுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், மற்றைய சந்தேகநபர் ஒகஸ்ட் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.