போலி சாமியார் செய்த சம்பவம் ; துஷ்ட சக்தியை போக்குவதாக சீரழிக்கப்பட்ட சிறுமி
இந்தியாவின் ராஜஸ்தானில் தாந்த்ரீகர் என்று கூறிக்கொண்டு வளம் போலி சாமியார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில், தாந்த்ரீகர் என்று கூறிக்கொண்டு வளம் வந்தவர், சிறுமியை கடத்தி மூன்று நாட்களுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
துஷ்ட சக்திகளின் தாக்கம்
இது தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,
மேஹர், சிறுமியின் குடும்பத்திடம், அவளுக்கு ஏற்பட்ட துஷ்ட சக்திகளின் தாக்கத்தை நீக்க சடங்குகள் செய்வதாகவும், குடும்பக் கடன்களைத் தீர்க்க உதவுவதாகவும் உறுதியளித்து இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
ஜூன் 22 அன்று ராய்ப்பூர் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தனது ஆசிரமத்திற்கு அவர்களை அழைத்து அங்கு, இரவு வரை சிறுமிக்கு சடங்குகளைச் செய்வது போல் நடித்தார். அடுத்த நாள் ஜூன் 23 காலை சாமியாரும் சிறுமியும் அந்த இடத்திலிருந்து காணாமல் போயுள்ளனர்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து பொலிஸார் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
கடந்த வாரம் ஜூன் 26 ஆம் திகதி அஜ்மீர் மாவட்டத்தில் சிறுமியை பொலிஸார் மீட்டனர். சிறுமி கடத்தப்பட்ட மூன்று நாட்களுக்கும் மேலாக சாமியாரால் தொடர் பாலியல் வன்கொடுமை செய்ப்பட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டது. இதன்பின் சாமியார் திங்களன்று கைது செய்யப்பட்டார்.
போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் நேற்று (01) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 2 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.