மிரிஹான சம்பவத்தில் இளைஞர் உயிரிழந்ததாக போலிச்செய்தி!
மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மையில் மிரிஹானவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு முன்பாக பேசிய இளைஞர் ஒருவர் களுபோவில வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் அந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் கைது செய்யப்பட்டு களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் உயிருடன் இருப்பதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எவரும் உயிரிழக்கவில்லை எனவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.