ஆதாரமற்ற குற்றச்சாட்டு ; பேருந்தில் பெண் எடுத்த வீடியோவால் பறிபோன உயிர்

Viral Video Sexual harassment Kerala Death Social Media
By Sulokshi Jan 19, 2026 10:16 AM GMT
Report

    கேரளாவில் பேருந்து பயணத்தின்போது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவிய நிலையில், 42 வயது மதிக்கத்தக்க நபர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 42 வயதான தீபக் என்ற நபர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது அறையில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டு ; பேருந்தில் பெண் எடுத்த வீடியோவால் பறிபோன உயிர் | Fake Harassment Man Kerala Bus Women Video

பேருந்தில் பெண் எடுத்த வீடியோ

ஜவுளி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த தீபக், கடந்த ஜனவரி 16-ஆம் தேதி கண்ணூர் நோக்கிப் பேருந்தில் பயணித்தபோது, அங்கு இருந்த ஒரு பெண் தீபக் தன் மீது தவறான முறையில் கை வைத்ததாகக் கூறி காணொளி ஒன்றை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

ஆலோசகர் மற்றும் விரிவுரையாளராகப் பணியாற்றும் அந்தப் பெண், இது ஒரு விபத்து அல்ல என்றும் “பாலியல் எல்லை மீறல்” என்றும் அக்காணொளியில் குறிப்பிட்டிருந்தார்.

நண்பர்கள் முன்னிலையில் பெண்ணை நிவாணப்படுத்தி காணொளி; தொழிலதிபரின் வெறிச்செயல்

நண்பர்கள் முன்னிலையில் பெண்ணை நிவாணப்படுத்தி காணொளி; தொழிலதிபரின் வெறிச்செயல்

சமூக வலைதளங்களில் அந்தப் பெண்ணின் காணொளி காட்டுத்தீயாகப் பரவியது. இருப்பினும், அக்காணொளியைப் பார்த்த பலரும், பேருந்தில் இருந்த கூட்ட நெரிசல் காரணமாகவே தீபக்கின் முழங்கை எதிர்பாராமல் அந்தப் பெண்ணின் மீது பட்டிருக்கலாம் என்றும், அவர் மீது தவறு இருப்பதாகத் தெரியவில்லை என்றும் கருத்துத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் , சமூக வலைதளங்களில் ஏற்பட்ட கடும் விமர்சனங்களாலும், பொதுவெளியில் ஏற்பட்ட அவமானத்தாலும் தீபக் கடந்த சில நாட்களாகக் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்த மன அழுத்தத்தின் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தீபக்கின் மரணம் தற்போது கேரளாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 ஆண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஆர்வலர்கள்

“ஆண்களின் உரிமைகளுக்காக” குரல் கொடுக்கும் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் அந்தப் பெண்ணுக்கு எதிராகக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

வெறும் விளம்பரத்திற்காகவும் சமூக வலைதள உள்ளடக்கத்திற்காகவும் (Content) ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி ஒரு உயிரைப் பறித்துவிட்டதாக அந்தப் பெண் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட டிஷ்யூ பேப்பர் ; அச்சத்தில் பயணிகள்...இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்!

கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட டிஷ்யூ பேப்பர் ; அச்சத்தில் பயணிகள்...இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்!

இச்சம்பவம் குறித்து “இயற்கைக்கு மாறான மரணம்” என வழக்குப் பதிவு செய்துள்ள கோழிக்கோடு பொலிஸார், வைரலான காணொளி மற்றும் தற்கொலைக்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US