நிரூபிக்க தவறிய குற்றம்... சந்தேக நபருக்கு நீதிபதி இளஞ்செழியன் விடுத்த உத்தரவு!
உடமையில் பாேதைப்பாெருளை வைத்து வியாபாரம் செய்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் குற்றச்சாட்டை நிரூபிக்க தவறியமையால் சந்தேக நபர் குற்றமற்றவர் என தெரிவித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா தரணிக்குளம் காத்தார் சின்னக்குளத்தை சேர்ந்த தியாகராஜா கிரிசாந் என்ற சந்தேக நபரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 2020 ஆண்டு செப்டெம்பர் வவுனியா போதைத் தடுப்பு பிரிவினரால் தீங்கு விளைவிக்க கூடிய கெரோயின் 16 கிராம் 40 மில்லி கிராம் உடமையில் வைத்திருந்தார் மற்றும் உடமையில் வைத்திருந்து வியாபாரம் செய்தார் என்று கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.
கடந்த 4 வருடங்களாக குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில்,10 கிராம் 0.6 மில்லிகிராம் அளவினைக் கொண்ட கெரோயினை தன் உடமையில் வைத்திருந்தார் மற்றும் உடமையில் வைத்து வியாபாரம் செய்தார் என்று குற்றஞ்சாட்டு வழக்கு தவிர்ந்து எவ்விதமான சான்றிதழ்களும் வழக்கு தொடுனரான சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரசதரப்பு வழக்கு தொடுனரால் சந்தேகத்துக்கு அப்பால் எம்பிக்க தவறியுள்ளதாக நீதிபதி மா.இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
அரச தரப்பின் நியாயமான சந்தேகங்களிற்கு அப்பால் தவறு இழைக்கப்படவில்லை என்ற அடிப்படையில் 1984 ஆண்டு 13 ம் இலக்க நச்சு வகைகள் அபின் மற்றும் அபாயகரமான ஔடத வகைகள் சட்டத்தால் திருத்தப்பட்ட நச்சு வகைகள் அபின் மற்றும் அபாயகரமான ஓளடத வகைகள் கட்டளை சட்டத்தின் கீழ் போதைப்பொருள் சட்டத்தின் 54 அ பிரிவு போன்ற குற்றங்களுக்கான கட்டளை சட்டத்தின் பிரகாரம் தீர்ப்பளிக்கப்பட்டு எதிரி குறித்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.