தொழிற்சாலை பணிக்குச் சென்றவர் சடலமாக மீட்பு
நோர்வூட் சாமிமலைப் பகுதியில் உள்ள தேயிலைத் தொழிற்சாலைப் பணிக்குச் சென்றவர் மரணித்த நிலையில், தொழிற்சாலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் வியாழக்கிழமை(17) நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலைப் பகுதியில் உள்ள, ஹொரன பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டொக்ஹொம் தோட்டத்தின் நூத்திபிரிவில் அமைந்துள்ள தேயிலைத் தொழிற்சாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு மரணமடைந்தவர், அதே தோட்டத்தில் வசிக்கும் பெரியமுத்துசாமி ஆறுமுகம் (வயது 69) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது உடல் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக டிக்கோயா - கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பல வருடங்களாக அதே தோட்டத்தில் அமைந்துள்ள தேயிலைத் தொழிற்சாலையில் அவர் பணிபுரிந்து வந்துள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மரணம் சம்பந்தமாக நோர்வூட் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்