பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay மூலம் நன்கொடை வழங்க வசதி
சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு GovPay ஊடாக நன்கொடைகளைச் செலுத்தக்கூடிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் யார் வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உதவிகளை வழங்க முடியும்.

நன்கொடைப் பணம்
இந்த GovPay வசதியின் மூலம் நன்கொடைப் பணம் உடனடியாக நிதிக்கு வரவு வைக்கப்படுவதுடன், செயல்முறை முழுமையாக வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதும் சிறப்பம்சமாகும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.
GovPay உடன் இணைக்கப்பட்டுள்ள இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகள் (Commercial Banks) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட FinTech செயலிகள் (Apps) பலவற்றின் மூலம் இந்த அனர்த்த நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்க முடியும்.
நன்கொடைகளைச் செலுத்தக்கூடிய வங்கிகள் மற்றும் FinTech செயலிகளின் பட்டியலை அறிந்துகொள்ள https://govpay.lk/si/supported-banks-fintech என்ற இணைப்பிற்குச் செல்ல முடியும்.