சீனாவின் குள்ளநரித்தனத்துக்கு ஆப்பு வைத்த பேஸ்புக்!
பேஸ்புக் Meta Platforms, சீனாவில் இருந்து செயல்படுவதாக அடையாளம் காணப்பட்ட சுமார் 500 போலி கணக்குகளை முடக்கி பேஸ்புக் சீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
சீனாவில் இருந்து குறித்த போலி கணக்குகளை பயன்படுத்தி கொவிட்டின் ஆரம்பம் குறித்த பரிசோதனைகள் தொடர்பாக போலியான செய்திகள் பரப்பப்பட்டமையை பேஸ்புக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்தே பேஸ்புக் Meta Platforms சுமார் 500 போலி கணக்குகளை முடக்கி சீனாவிற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அந்தக் கணக்குகள் சுவிஸ் உயிரியலாளர் வில்சன் எட்வர்ட்ஸ் என்ற போலியான பெயரில் உருவாக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது இந்த போலி கணக்குகளின் உள்ளடக்கங்கள் சீன ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.