இளைஞர், யுவதிகளின் மோசமான செயல் - சுற்றிவளைத்த பொலிஸார்
குருநாகல் பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் பேஸ்புக் ஊடாக அறிமுகமாகிய இளைஞர், யுவதிகள் நடத்திய விருந்து ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
அங்கு பணம், போதைப்பொருளுடன் விருந்தை ஏற்பாடு செய்த மற்றும் விருந்திற்கு இசை வழங்கிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விருந்தில் 24 பேர் கலந்து கொண்டுள்ளனர். பொலிஸார் அவ்விடத்திற்கு வருகைத்தந்தவுடன் அவர்களில் 22 பேர் தப்பி சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மதுபான போத்தல்கள் மற்றும் 175,000 ரூபாய் பணத்தை பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.
விருந்தில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகள் தொடர்பில் தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விருந்தில் கலந்து கொண்ட அனைத்து இளைஞர் யுவதிகளையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.