மிகவும் ஆபத்தான விதத்தில் வெப்பநிலை; வரும் ஐந்து ஆண்டுகளுக்கு எச்சரிக்கை
தென்னாசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் வெப்பநிலை மிகவும் ஆபத்தான விதத்தில் அதிகரிக்கலாம் என்ற எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளன.
ஐநா எச்சரிக்கை
அடுத்த ஐந்து வருடங்களில் வெப்பநிலை பலமடங்காக அதிகரிக்கும் என்ற ஐநா தனதுஅறிக்கையில் எச்சரித்துள்ள நிலையிலேயே ஆசியா குறித்த எச்சரிக்கைகளும் வெளியாகியுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாக்கிஸ்தானின் வெப்பநிலை 50 செல்சியசாக காணப்பட்டது .ஜக்கோபாபாத்தில் 49 செல்சியசாக காணப்பட்டது. அதேசமயம் வடஇந்தியாவின் பெரும் பகுதிகளும் தற்போது கடும் வெயிலில் சிக்குண்டுள்ளன.
ஆசியாவின் பல பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக தீவிரமான வெப்பநிலை காணப்படுகின்றது. சீனா தாய்லாந்து மியன்மார் பங்களாதேஸ் உட்பட பல நாடுகளில் வெப்பநிலை பல மடங்காக அதிகரித்துள்து.
மிக அதிகஅளவு வெப்பநிலை பதிவாகும் ஆபத்து
இந்நிலையில் வழமையாக இந்த காலப்பகுதியில் வெப்பம் அதிகம் என்கின்றபோதிலும் கடந்த எட்டுவாரங்களில் வழமைக்கு மாறான நிலை காணப்படுகின்றது என காலநிலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாற்றம் காரணமாக இந்த சூழ்நிலையை தொடர்ந்து எதிர்கொள்ளவேண்டியுள்ளதாக காலநிலை விஞ்ஞானி நந்தினி ரமேஸ் தெரிவித்துள்ளார். எனினும் நடப்பாண்டில் மக்கள் அதிகளவு வெப்பத்தை எதிர்கொள்கின்றனர் என அவர் தெரிவித்தார்.
எனினும் துரதிஸ்டவசமாக இயல்பாகவே வெப்பநிலை அதிகமாக காணப்படும் இந்தமாதங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய பிராந்தியத்தில் தொடர்ந்து இரண்டாவது வருடமாக கடும் வெப்பத்தை மக்கள் எதிர்கொண்டுள்ளதாகவும், இவ்வாறான நிலை தொடர்வது எச்சரிக்கை மணியை அடிக்கின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேசமயம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏதாவது ஒரு வருடத்தில் மிக அதிகஅளவு வெப்பநிலை பதிவாகும் ஆபத்துள்ளதாக உலகவானிலை அமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.