முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்ட பரீட்சைகள் ஆணையாளர்!
O/L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் போக்குவரத்து தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.
க.பொ.த சாதாரண தரப்பரீட்சை நடைபெறும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள போதிலும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை எவ்வித இடையூறும் இன்றி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் இடையூறுகளின்றி தகுந்த நேரத்திற்கு பரீட்சைகளுக்கு செல்லும் வகையில், மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதற்கும் திரும்புவதற்கும் சாதாரண புகையிரதங்கள் சேவைகள் ஈடுபடுத்தப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.