ஒவ்வொரு 3 வினாடிக்கும் 100 பேருக்கு பாதிப்பு; WHOவெளியிட்ட பகீர் தகவல்கள்
உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் 150வது அமர்வின் தொடக்கத்தில் உரையாற்றிய அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ( Tedros Adhanom Caprese) கொரோனா குறித்து பகீர் தகவலை வெளியிட்டார்.
அதாவது , தொற்றுநோய் எவ்வாறு பரவும் என்பது குறித்தும், கடுமையான கட்டம் எவ்வாறு முடிவடையும் என்பதற்கு வெவ்வேறு காட்சிகள் உள்ளன. ஆனால் இது ஆபத்தானது. ஒமிக்ரான் கடைசி மாறுபாடாக இருக்கும் என்றும் நாம் தொற்று நோயின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம் என்று கருதுவது ஆபத்தானது என்றும் அவர் கூறினார்.
9 வாரங்களுக்கு முன்பு Omicron முதன்முதலில் அடையாளம் காணப்பட்டதிலிருந்து, 80 மில்லியனுக்கும் அதிகமான நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது, 2020 முழுவதும் பதிவாகியதை விட அதிகம் என கூறிய அவர், சராசரியாக கடந்த வாரம், ஒவ்வொரு மூன்று வினாடிகளுக்கும் 100 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, மேலும் ஒவ்வொரு 12 வினாடிகளுக்கும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார்.
அதேசமயம் எதிர்காலத்தில் உலகம் கோவிட்-19 உடன் வாழும் என்பது உண்மைதான் என தெரிவித்த அவர், கடுமையான சுவாச நோய்களுக்கான நிலையான மற்றும் ஒருங்கிணைந்த அமைப்பின் மூலம் அதை நிர்வகிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
எனினும் மிகவும் ஆபத்தில் உள்ள குழுக்களை மையமாகக் கொண்டு, ஒவ்வொரு நாட்டின் மக்கள்தொகையில் 70% பேருக்கு தடுப்பூசி போடும் இலக்கை அடைவதன் மூலம் கொரோனாவை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக உலகம் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.