போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி தொடர்பில் அம்பலமான தகவல்கள்
போலி சாரதி அனுமதிப்பதிர மோசடி தொடர்பான தகவல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
போலி சாரதி அனுமதிப்பதிரங்களைப் பெறுவதற்கு சிலர் ரூ. 35,000 முதல் 50,000 வரை செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

எனவே இது தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்படும் அபாயம் உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் உள்ளதால் தமது கைகளுக்குக் கிடைக்கும் நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.