அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி மாற்றம்
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் நேற்றைய தினத்துடன் (11) ஒப்பிடுகையில் இன்று அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கி
நேற்றைய தினம் 308.98 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 305.09 ரூபாவாக குறைந்துள்ளது.
அதேபோல் விற்பனை பெறுமதியும் 326.62 ரூபாவிலிருந்து 322.51 ரூபாவாக குறைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கி
நேற்றைய தினம் 308.75 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 307.58 ரூபாவாக குறைந்துள்ளது.
அதேபோல் விற்பனை பெறுமதியும் 324 ரூபாவிலிருந்து 320 ரூபாவாக குறைந்துள்ளது.
சம்பத் வங்கி
நேற்றைய தினம் 309 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 307 ரூபாவாக குறைந்துள்ளது.
அதேபோல் விற்பனை பெறுமதியும் 324 ரூபாவிலிருந்து 322 ரூபாவாக குறைந்துள்ளது.