இன்றுமுதல் ஆரம்பமான பரீட்சை; பரீட்சை திணைக்களம் விடுத்த அறிவிப்பு
இன்று (12) முதல் 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்பம் தொடர்பான செயல்முறைப் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 42 நிலையங்களில் இந்தப் பரீட்சை இடம்பெறவுள்ளதாக பிரதிப் பரீட்சை ஆணையாளர் லசிக சமரகோன் தெரிவித்தார்.
அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்
இந்தப் பரீட்சையில் 20,084 பேர் தோற்றுகின்றதாக தெரிவித்த பரீட்சை திணைக்களம், ஏதேனும் சந்தேகங்கள் சிக்கல்கள் இருப்பின், 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் எனவும் கூறியுள்ளது.
அதேவேளை பரீட்சை அனுமதி பத்திரம் கிடைக்காதவர்கள் onlineexam.gov.lk என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் எனவும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.