புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாளில் தகாத வார்த்தைகள் ; அதிர்ச்சியில் மாணவர்கள்
அநுராதபுரம் கல்வி வலயத்தில் தரம் 5 மாணவர்களுக்கு திங்கட்கிழமை (22) வழங்கப்பட்ட புலமைப்பரிசில் மாதிரிப் பரீட்சை வினாத்தாளில் தவறான மொழிப் பிரயோகம் காணப்பட்டுள்ளது.
இது மாணவர்களுக்கும், ஆரிசிரியர்களுக்கும் குழப்பத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிர்ச்சியில் மாணவர்கள்
நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைசக்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில், மாதிரி வினாத்தாள், கல்வி வலயத்திற்குட்பட்ட 2,000 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் வலயக்கல்வி காரியால அதிகாரிகள் இந்த வினாத்தாள் தயாரித்து அச்சிட்டு உரிய பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்கியுள்ளனர்.
திங்கட்கிழமை காலை மாணவர்கள் வினாத்தாளைப் படிக்கத் தொடங்கியவுடன், அவர்கள் அமைதியற்றவர்களாகத் தோன்றியதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பின்னர் வினாத்தாளில் பல எழுத்துப் பிழைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, குறிப்பாக கேள்வி எண் 29 இல் உள்ள ஒரு வினாவில் பொருத்தமற்ற மற்றும் புண்படுத்தும் மொழியைப் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இதனை அடுத்து வலயக் கல்வி அலுவலகம் பிழைகளை சரிசெய்து பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு பரீட்சை வினாத்தாளை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுத்தது.
இந்தப் பிரச்சினை குறித்துப் பேசிய இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, “இவர்கள் ஆரம்ப நிலைக் பிள்ளைகள். பிழைகள் நிறைந்த, குறிப்பாக தவறான மொழி நடையைக் கொண்ட பரீட்சை வினாத்தாள் ஒன்றை அவர்களுக்கு வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றார்.
சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கே.எம்.எச்.எஸ்.கே. ஜெயலத் தெரிவித்துள்ளார்.