உணவிற்காக முன்னாள் அமைச்சர் விடுத்த கோரிக்கை ; மறுக்கும் சிறை உயரதிகாரிகள்
சிறைச்சாலையில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேனவுக்கு வெளியிலிருந்து உணவுகளை கொண்டுவர முடியாது என சிறைச்சாலை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
2015 ஜனாதிபதி தேர்தலின் போது தனது அன்புக்குரியவர்களுக்கு 25 மில்லியன் ரூபா பெறுமதியான சோளங்களை வழங்கியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கடந்த வெள்ளிக்கிழமை (04) கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சிறைச்சாலையில் இருக்கும் வரை முன்னாள் அமைச்சருக்கு வெளியிலிருந்து உணவுகளை கொண்டுவர அனுமதி வழங்குமாறு சிறைச்சாலை உயர் அதிகாரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரின் உடல்நிலை நலமாக இருப்பதால் அவருக்கு வெளியிலிருந்து உணவுகளை கொண்டுவர முடியாது என சிறைச்சாலை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.