ஆரம்ப பாடசாலை ஒன்றில் 10 இலட்சம் செலவில் நிகழ்வு; ஆடிப்போன கல்வி அதிகாரிகள்
தங்காலை பிரதேசத்தில் ஆரம்ப பாடசாலை ஒன்றில் மாணவ தலைவர்களுக்கான அதிகாரப்பூர்வ பேட்ஜ் அணிவிக்கும் விழாவிற்கு ரூபாய் 10 இலட்சத்துக்கு அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாடசாலைகளில் வெளிப்புற நடவடிக்கைகளுக்காக பெற்றோர்களிடமிருந்து எந்தவித கட்டணங்களும் அறவிடக் கூடாது என்று கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

முறையான அனுமதியின்றி விழா
எனினும் இவ்விழாவிற்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டமை குறித்து தென் மாகாண கல்வி அதிகாரிகளையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கடந்த 16ஆம் திகதி பாடசாலைக்கு வெளியேயுள்ள ஒரு இடத்தில் நடத்தப்பட்ட இந்த விழாவிற்கு, தங்காலை வலய கல்வி அலுவலகத்தில் முறையான அனுமதியின்றி மாணவர்களையும் பங்கேற்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்த நிகழ்வின்போது பாடசாலையின் மாணவர்கள் சிலர் இணைந்து ஒரு நாடகத்தை அரகேற்றியிருந்தாகவும், அந்த நாடகம் மாணவர்களுக்கு முன்மாதிரியாக அமைய வேண்டிய விடயங்களை மீறிய கருப்பொருளில் அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.