சபாநாயகர்கூட அடகு வைக்கப்பட்டுள்ளார்! ஆளுங்கட்சி எம்.பி. பரபரப்பு தகவல்
நாட்டின் ஒவ்வொரு குடி மகனும் 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு அடகு வைக்கப்பட்டுள்ளனர் என்று ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” இந்த நாட்டை துண்டு துண்டுகளாக உடைத்து விற்பனை செய்வதை 225 நாடாளுமன்ற உறுப்பினா்களும் தடுப்பதே பிரதான இலக்காக இருக்கவேண்டும். இதற்காக கட்சி பேதம் இன்றி, இனவாதம் இன்றி, மதவேறுபாடு இன்றி செயற்படாது போனால், நாட்டை காப்பாற்ற முடியாது.
இலங்கையில் 2005 இல் மஹிந்த ராஜபக்ச ஆட்சியை பொறுப்பேற்ற போது 2000 பில்லியன் ரூபாவாக இருந்தது. இன்று 22000 பில்லியன் ரூபாவை வெளிநாட்டு கடன்களாக செலுத்தவேண்டியுள்ளது. இதன்படி நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் 9லட்சத்து 50ஆயிரம் ரூபாவுக்கு அடகு வைக்கப்பட்டுள்ளாா்.
சபாநாயகராகிய உங்களையும் அடகு வைத்துள்ளனர். பௌத்த மகாநாயக்கா்கள் முதல் கா்தினால் வரையிலான அனைத்து இலங்கை மக்களும் 9லட்சத்து 50ஆயிரம் ரூபாவுக்கு அடகு வைக்கப்பட்டுள்ளனர். இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் வருமானம் சீனாவுக்கு செல்கிறது. போட் சிட்டியின் வருமானம் சீனாவுக்கு செல்லவுள்ளது.
இரவு 12 மணிக்கு உடன்படிக்கை செய்யப்பட்டு நாட்டின் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்தநிலையில், நாட்டின் பாதீட்டில் ஏற்படும் துண்டுவிழும் தொகையை எவ்வாறு நிரப்புவது, சீனாவிடமே பிச்சையெடுக்கவேண்டும்.