யாழில் சங்கிலியை திருடிக்கொண்டு வவுனியாவுக்கு தப்பியோட்டம்!
யாழ்.சாவகச்சோி நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் சங்கிலி ஒன்றை திருடிக் கொண்டு வவ்8உனியாவுக்கு தப்பிச் சென்ற சந்தேகநபரை ஒரு மணி நேரத்தில் பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருகையில், சாவகச்சோி நகரில் உள்ள நகைக்கடை ஒன்றுக்கு சென்றிருந்த நபர் ஒருவர், அங்கு சங்கிலி வாங்கப்போவதாக பாசாங்கு செய்து சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான சங்கிலியை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
துரிதமாக செயற்பட்ட பொலிஸார்
நகை திருடப்பட்டதை ஒரு சில நிமிடங்களில் கண்டுபிடித்த கடை உரிமையாளர் தனது உதவியாளரை அழைத்து திருடனை கண்டுபிடித்து பின் தொடருமாறு கூறியதுடன்,சம்பவம் தொடர்பில் சாவகச்சோி பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து துரிதமாக செயற்பட்ட பொலிஸார் திருடிய சங்கிலியுடன் வவுனியா நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த திருடனை மடக்கி பிடித்துள்ளனர்.
இந்தநிலையில் திருட்டு நடைபெற்று ஒரு மணித்தியாலத்திற்குள் பொலிஸார் மற்றும் நகைக்கடை உரிமையாளரின் துரித நடவடிக்கையால் திருடன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.