பாடசாலைகளை தொடங்குவதற்கான சூழல் உள்ளது - இலங்கை மருத்துவ சங்கம்
நாட்டில் தற்போது உள்ள சூழல் பாடசாலைகளை மீள திறப்பதற்கு உகந்ததாக உள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நூற்றுக்கு 80 முதல் 90 சதவீத மக்கள் குணமடைந்துள்ளனர்.
இந்த மாதிரியான சூழல் இதற்கு முன்பு நாட்டில் தென்படவில்லை என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.
தற்போது சாதாரண நிலைக்கு திரும்புவது குறித்து தீர்மானிக்கலாம் ஆனால் சரியான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி முன்னெடுத்து செல்லவேண்டும் என அவர் தெரிவித்தார்.
மேலும் பாடசாலைகளை தொடங்குவதற்கான சூழ்நிலை வந்துவிட்டதாக இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.