பல் வைத்தியருக்கும் தாய்க்கும் அரங்கேறிய கொடூரம் ; உடன் பிறந்தவர்களே செய்த அதிர்ச்சிப் பின்னணி
சென்னை அண்ணா நகரில் நடந்துள்ள இரட்டை கொலை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொத்து தகராறில் பல் டாக்டரும், அவரது தாயாரும் கொடூரமாக கொல்லப் பட்டுள்ளனர்.
சென்னை அண்ணா நகர் கிழக்கு 1-வது அவென்யூவில் 3 மகன்களுடன் பெண்ணொருவர் ஒரே வீட்டில் இருந்துள்ளார்.

சொத்து தகராறு
இந்த நிலையில் குறித்த பெண்ணின் இளைய மகனான பல் வைத்தியருக்கும் அவரது அண்ணன்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
இது தொடர்பாக நேற்று இரவு வீட்டில் வைத்து சொத்து தொடர்பாக இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அண்ணன்கள் இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி தாய், தம்பியை அடித்து கொன்றுவிட்டு இருவரும் நாடகம் ஆடியுள்ளனர்.
தாயும், தம்பியும் வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டனர் என்று அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும், பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். முகம் மற்றும் பல இடங்களில் காயங்கள் இருந்தது.
இதைத் தொடர்ந்து சகோதரர்களான இருவரிடமும் பொலிஸார் அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர்.
இதில் இருவரும் தாயையும், தம்பியையும் சொத்து தகராறில் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு இந்த இரட்டை கொலை சம்பவம் அண்ணாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.